கார குழிப் பணியாரம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புளித்த இட்லி மாவு - 4 கோப்பை

சோடா உப்பு - ஒரு சிட்டிகை

நறுக்கிய வெங்காயம் - 1/2 கோப்பை

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி

கடுகு சீரகம் கலந்தது - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1/4 கோப்பை

செய்முறை:

இட்லிமாவில் ஒரு சிட்டிகை சோடாவைச் சேர்த்து கலந்துவைக்கவும்.

ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காயவைத்து கடுகுசீரகத்தை போட்டு வெடிக்கவிட்டு உளுத்தப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வெந்தவுடன் கலவையை மாவில் கொட்டவும். அதனுடன் கொத்தமல்லியையும் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.

பிறகு குழிப்பணியார சட்டியின் குழிகளில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை குழிகளில் முக்கால் வரையில் ஊற்றி வேகவிடவும்.

கூர்மையான கத்தி அல்லது கம்பியைக் கொண்டு பணியாரத்தை திருப்பிவிட்டு வேகவிடவும்.

இரண்டு புறமும் இளஞ்சிவப்பாக வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னி அல்லது கோழி குருமாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாய் இருக்கும்..