கார்ன் தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - தேவையான அளவு

வேக வைத்த மக்காச்சோளம் - 1/2 கப்

வெங்காயம் - 2 (மெல்லியதாக கீரியது)

துருவிய சீஸ் - ருசிக்கு

உருளைக்கிழங்கு - 2

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி - சிறிது

முந்திரி - 5

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

உருளை வேக வைத்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், முந்திரியும் நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கவும்.

இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின் வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், முந்திரி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

இதில் உருளை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவும்.

வழக்கம் போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கலவை சிறிது, அதன் மேல் வேக வைத்த மக்காச்சோளம், துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: