காய்கறி உப்புமா
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தேங்காய் பூ- 3 மேசைக்கரண்டி
வரட்டிய இரால் - 5
வெங்காயம் - 5 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
கீரைப்பொடி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - தேவையான அளவு
மசாலாதூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு - சிறிது
கருவேப்பிலை - சிறிது
உருளைகிழங்கு - 1
கேரட் - 1
தக்காளி - 1 பெரியது
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட்,உருளைகிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை இரண்டாக கீறிவைக்கவும்.
தக்காளி,வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.இராலை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
ரவையை தனியாக வறுத்துவைக்கவும்.
பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போடவும்.பின் வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கி,பின் தக்காளி போட்டு வதக்கி,பின் இரால்,வேகவைத்த காய்கறிகளை போட்டு வதக்கவும்.பின் மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு போட்டு வதக்கி,சிறிது தண்ணீர் ஊற்றி தேங்காய் பூவை போட்டு கிளறி விடவும்.
பின் வறுத்துவைத்த ரவையை போட்டு நன்கு கிளறி சிறிது நேரம் கழித்து ரவை வெந்ததும் கீரைப்பொடி சேர்த்து கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.