காஞ்சிபுரம் இட்லி (6)
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - 1 டம்ளர்
பச்சரிசி - 1 டம்ளர்
குண்டு உளுத்தம் பருப்பு -2 டம்ளர்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சமையல் சோடா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
முந்திரி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 தேக்கரண்டி(நறுக்கியது)
மிளகு -2 தேக்கரண்டி (உடைத்தது)
இஞ்சி - 2 தேக்கரண்டி(நறுக்கியது)
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுந்து, வெந்தயத்தை ஒன்றாகவும் ஊற வைக்கவும்.
ஊறியதும் உளுந்தை நைசாக (வெண்ணெய் பதத்தில்) அரைத்து எடுத்துக் கொண்டு, அரிசியை ரவை பதத்திற்கு அரைத்து உப்பு, சமையல் சோடா சேர்த்து கலக்கி மாவை 8 மணி நேரம் புளிக்க விடவும்.
இட்லி ஊற்றும்முன், வாணலியில் எண்ணெய், நெய் இரண்டையும் ஒன்றாக ஊற்றி காய்ந்ததும் கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி சேர்த்து சிவக்கவிட்டு, மிளகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் கொட்டி கலக்கி வைக்கவும்.
கலக்கிய மாவை ஒரேஅளவுள்ள உயரமான கப்களிலோ அல்லது டம்ளர்களிலோ எண்ணெய் தடவி அரை அளவிற்கு மாவை ஊற்றவும்.
குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சூடேறியதும் மாவு ஊற்றிய டம்ளர்களை அடுக்கி வெயிட் போடாமல் வேகவைக்கவும்.
கத்தியால் குத்தி பார்த்தால் ஒட்டாமல் இருக்கும் (10 - 15 நிமிடங்கள் ஆகும்).
அப்போது எடுத்து, சிறிது ஆற விட்டு, தலைகீழாக கவிழ்த்தால் இட்லி அழகாக வரும்.
குறிப்புகள்:
இதற்கு கலவை சட்னி, கோஸ் துவையல் நன்றாக இருக்கும்.