கறிவேப்பிலை ரொட்டி
தேவையான பொருட்கள்:
கோதுமைமா (மைதாமா) - 500 கிராம்
பால் - 1 மேசைக்கரண்டி
பட்டர் - 1 மேசைக்கரண்டி
முட்டை - 1
கொதி நீர் - தேவையான அளவு
சிறிது சிறிதாக வெட்டிய பெரிய வெங்காயம் - 1
சிறிய வட்டமாக வெட்டிய பச்சை மிளகாய் - 3
சிறிது சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமைமா, உப்பு, பால், பட்டர், முட்டை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு கலக்கவும். பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும்.
குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.
பின்பு அடுப்பில் தோசைக்கல் வைத்து அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் தடவவும்.
அதன் பின்பு வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேக விடவும். வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
இருபக்கமும் வெந்ததும் சுவையான, மென்மையான (ரொட்டி தயாராகி விடும்) .