கறிவேப்பிலை தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 3 கப்
உளுந்து - 1 கப்
கறிவேப்பிலை பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும் உளுந்தையும் தனித்தனியே ஊறவைத்து பொங்கப் பொங்க அரைக்கவும். உப்பு சேர்த்து நல்ல கலந்து 8 மணிநேரம் வைக்கவும்.
தோசை மெல்லிய வட்டவடிவமாக ஊற்றி நடுவில் கறிவேப்பிலை பொடியை தூவவும் இப்போது மேலே கொஞ்சம் எண்ணெய் விடவும்.
நல்ல அந்த மசாலா தோசையில் எல்லா இடமும் ஒரே போல பரவலாக்க வேண்டும்.திருப்பி போட்டு எடுக்கவும்.
நல்ல கறிவேப்பிலை தோசை ரெடி.
குறிப்புகள்:
இதற்க்கு சாம்பார், தக்காளி சட்னி வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.