கறிவேப்பிலை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - 1 1/2 கப்

புழுங்கலரிசி - 1/2 கப்

அவல் - 1/2 கப்

உளுந்து - 1/2 கப்

துவரம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 1/2 கப்

பச்சை மிளகாய் - 4

சின்ன வெங்காயம் - 10

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சை அரிசி, புழுங்கலரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து 5 மணிநேரம் ஊறவைக்கவும். அரைப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன் அவலை ஊறவைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.

5 மணிநேரத்திற்கு பின் அரிசி, பருப்பு கலவையை நைசாக அரைக்கவும். அவலுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து நைசாக பொங்கப் பொங்க அரைத்து அரிசி மாவுக்கலவையுடன் சேர்த்து உப்பு போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பிறகு மாவை 5 முதல் 6 மணிநேரம் வரை புளிக்கவிடவும்.

மாவு புளித்த பின்பு தோசைக்கல்லை சூடாக்கி சற்று கனமான தோசைகளாக எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும்.

சத்தான, சுவையான கறிவேப்பிலை தோசை தயார்.

குறிப்புகள்:

பூண்டு சட்னி இதற்கு நல்ல காம்பினேஷன்.