கருப்பு உளுந்து தோசை
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 1 கப்
புழுங்கலரிசி- 1 கப்
கருப்பு உளுந்து - 1/2 கப்
மிளகு- 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 1/2 கப்
இஞ்சித்துருவல்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி வகைகளை முந்தின தினம் இரவு ஊறவைக்கவும்.
மறுநாள் காலை அரிசி அரைக்கவும். அது பாதி அரைபட்டதும்.
கருப்பு உளுந்தை நன்கு கழுவிச் சேர்க்கவும் (உளுந்தை ஊற விட வேண்டாம்). அத்துடன் மிளகு, இஞ்சி சேர்த்து நன்கு பொங்கப் பொங்க அரைக்கவும்.
அரைத்த மாவில் தேவையான உப்பு கலந்து 4 - 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
தோசை சுடும்போது கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலந்து சுடவும்.