கடலை மாவு தோசை
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 250 கிராம்.
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 துண்டு
பச்சை பட்டாணி (வேக வைத்தது) - 100 கிராம்
உதிர்த்த பன்னீர் (காட்டேஜ் சீஸ்) - 250 கிராம்
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
இதில் பச்சை பட்டாணி, பன்னீர், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
கடலை மாவை உப்பு சேர்த்து கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாக கரைக்கவும். இந்த மாவை மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
இதன் நடுவில் 2 மேஜைக்கரண்டி பன்னீர் கலவை வைத்து மசாலா தோசை போல மூடி பரிமாறவும்.