கடலை பருப்பு உப்புமா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

கடலை பருப்பு - 1/2 கப்

காய்ந்த மிளகாய் - 7

வெங்காயம் - 1

கடுகு, உளுந்து - தாளிக்க

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

பெருங்காயம்- 1 சிட்டிகை

தேங்காய் பூ- 1/4 கப்

எண்ணெய் - 3 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி,கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

இதனுடன் காய்ந்த மிளகாய்,உப்பு,பெருங்காயம் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி,கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் தாளித்து அரைத்த மாவை சேர்த்து கிண்டவும்.

சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கிண்டினால் உதிர, உதிர வரும்.

குறிப்புகள்:

சூடாக, தேங்காய் பூ சேர்த்து பரிமாறவும்.