ஊத்தப்பம்
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
புழுங்கலரிசி - 2 கப்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உப்பைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, தண்ணீரில் ஊற வைக்கவும்.
நன்றாக நைஸாக அரைத்து கடைசியில் உப்பு சேர்க்கவும். மாவு பொங்கி வருவதற்காக மறுநாள் வரை மூடி வைக்கவும்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து கனமாக வட்டமாக ஊற்றவும்.
எண்ணெய் ஊற்றி இரு புறமும் திருப்பி போட்டு வார்க்கவும்.
குறிப்புகள்:
சட்டினி சாம்பாருடன் பரிமாறவும்.