உடனடி உளுத்தம் மாவு தோசை (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு அல்லது மைதா மாவு - 3 கப்
வறுத்த உளுத்தம் மாவு - 1 கப்
பட்டர் - 1 மேசைகரண்டி
பால் - சிறிதளவு
முட்டை - 1
சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை - சிறிதளவு
சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவு அல்லது மைதா மாவு, உளுத்தம் மாவு, உப்பு, பட்டர் பால், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டு (தோசைமாவு பதம்) கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் காயவைக்கவும். அது நன்கு சூடானதும் அதில் எண்ணெய் தடவவும்.
பின்பு அதில் மாவை ஊற்றி பரத்திவிடவும் (ஒரளவு மெல்லிய தோசைகளாக) தோசை வெந்தவுடன் தோசையை திருப்பிவிடவும். அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்:
இந்த தோசைக்கு, சட்னி, உருளைக்கிழங்கு பிரட்டல் கறி நன்றாக இருக்கும்.