ஈச்சங்கொட்டை பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு படி

முட்டை - 2

நெய் - 150 கிராம்

தேங்காய் பால் - ஒரு டம்ளர்

எண்ணெய் - 3/4 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டையை கலக்கவும், ஒரு தாம்பாளத்தில் மாவை கொட்டி நடுவில் குழி பரிக்கவும். மேலும் நெய்யை சூடு செய்து மாவில் ஊற்றவும், தேங்காய் பாலையும் சூடு செய்து ஊற்றவும்.

கலக்கிய முட்டை, உப்பையும் சேர்த்து நன்கு பிசையவும்.

இரண்டு இன்ச் நீளத்திற்கு ஈச்சங்கொட்டைப்போல் உருட்டி நடுவில் ஒரு குச்சியால் அழுத்தவும். அனைத்து மாவுகளையும் இதேபோல் செய்துக் கொள்ளவும்.

வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டிய மாவுகளை போட்டு வேக விடவும். பொன்னிறமானவுடன் எடுக்கவும்.

குறிப்புகள்:

இந்த மாவை 1/2 அங்குல உயரத்திற்கு தட்டி அச்சுக்கலில் பதித்தும் செய்யலாம்.