ஈசி ப்ரெட் உப்புமா (1)
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் பொடித்தது - 2 கப்
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
கறிவேப்பிலை - 1 இனுக்கு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்து - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
ப்ரெட் ஸ்லைஸ்களை மிக்சியில் இட்டு பொடியாக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
பொடித்த ப்ரெட் சேர்த்து மேலும் 1நிமிடம் கிளறி இறக்கவும்.