இறால் கிச்சடி
தேவையான பொருட்கள்:
ரவை - 2 கப்
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
இறால் - 50 கிராம்
வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
தண்ணீர் - 5 கப்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரவையை வறுத்துக் கொள்ளவும்
வெங்காயம், தக்காளி சிறிதாக வெட்டவும்
அடுப்பில் சட்டியை வைத்து 2 மேசைக்கரண்டி எண்ணெய்யை விட்டு கொதித்ததும் அதனுள் கடுகைப்போட்டு வெடிக்கவிட்டு வெங்காயம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றையும் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும். வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அதனுடன் சுத்தமாக்கிய இறாலையும் கொட்டி வதக்கவும்.
இறால், மிளகாய் தூள் போட்டு சிறிது நேரம் வதங்கியதும், பின் அதனுள் 2 கப் நீரை விட்டு அதனுடன் அளவாக உப்பும் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்து உடன் ரவையைக்கொட்டி நன்றாக கட்டி படாதவாறும், அடிப்பிடிக்காதவாறும் கிளறி ரவை அவிந்து மென்மையாக வரத்தொடங்கியதும் இறக்கி சூட்டுடன் பரிமாறலாம்.