இனிப்பு இடியாப்பம் (2)
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 20
தேங்காய் - ஒரு மூடி
கிஸ்மிஸ், முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் - 2
பட்டை - 2 துண்டு
முட்டை - 2
சீனி - ஒரு ஆழாக்கு
நெய் - 50 கிராம்
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
முதலில் தேங்காயில் கெட்டியாகப் பால் எடுத்துக் கொள்ளவும். தண்ணீர்ப்பால் கொஞ்சம் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
தண்ணீர்ப் பாலைத் தொட்டுக் கொண்டு இடியாப்பத்தை சிறுசிறு துண்டுகளாகப் பிய்க்கவும்.
கெட்டிப் பாலில் முட்டையை உடைத்து ஊற்றி, சீனியையும் போட்டு, சிறிது உப்பும் கரைத்து ஊற்றிக் கரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் இடியப்பத் துண்டுகளைப் போட்டு அதில் கரைத்து வைத்திருக்கும் பாலைத் தெளித்துப் புரட்டவும்.
கம்பி கம்பியாக இடியப்பம் உதிர்ந்ததும் ஓர் அலுமினியச் சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்ததும் நெய்யை ஊற்றி, கிஸ்மிஸ் முந்திரியை சுத்தம் செய்து கழுவி அதில் போட்டு பொன் நிறத்தில் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதன்பின் மீதி நெய்யில், ஏலம், கிராம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து புரட்டி வைத்திருக்கும் இடியப்பத்தை அதில் போட்டு கிளறவும்.
இடியப்பம் உதிராதிருந்தால் தண்ணீர் சத்து மாறி பொலபொலவென்று உதிர்ந்ததும் இறக்கி பன்னீர் தெளித்து கிஸ்மிஸ், முந்திரிகளைப் போடவும்.