இனிப்பு இடியாப்பம்
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 20
தேங்காய் - 1 மூடி
முந்திரி - 25 கிராம்
கிஸ்மிஸ் - 25 கிராம்
ஏலம் - 2
பட்டை - 2 துண்டு
முட்டை - 2
சீனி தேவையான அளவு
நெய் - 50 கிராம்
கிராம்பு - 2
செய்முறை:
முதலில் தேங்காயை அரைத்து கெட்டிபால் எடுத்து தனியாக வைக்கவும்.
தண்ணீர் பால் கொஞ்சம் எடுக்கவும்.
பின் தண்ணீர் பாலை தொட்டுக்கொண்டு இடியாப்பத்தை சிறு சிறு துண்டுகளாக பிய்க்கவும்.
கெட்டியான பாலில் முட்டையை உடைத்து ஊற்றி சீனியை போட்டு கரைத்து வைக்கவும்.
பின் பிய்த்து வைத்த இடியாப்பத்தில் இதை ஊற்றி பிரட்டவும் இடியப்பம் உதிர்ந்ததும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி காய்ந்ததும் கிஸ்மிஸ்,முந்திரியை வறுத்து தனியாக வைக்கவும்.
பின் மீதி நெய்யில் கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து பிரட்டி வைத்த இடியாப்பத்தை போட்டு கிளறவும்.
இடியாப்பம் நன்கு உதிர்ந்ததும் இறக்கி சிறிது பன்னீர் தெளித்து வறுத்து வைத்த முந்திரி, கிஸ்மிஸை போட்டு பரிமாறவும்.