இட்லி மஞ்சூரியன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி - 6

தக்காளி கெச்சப் - 1 கப்

ரெட் சில்லி சோஸ் - 1/4 கப்

பொடியாக வெட்டிய பூண்டு - 3 பல்லு

பொடியாக வெட்டிய வெங்காயத்தாள் - 1/2 கப்

சோயா சோஸ் - 2 தேக்கரண்டி

கார்ன் ப்ளோர் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

கொத்தமல்லித்தழை - சிறித

ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

எண்ணெயை சூடாக்கி நன்கு கொதித்ததும் அதனுள் வெட்டிய இட்லி துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து ஒரு பேப்பரில் பரவலாக போட்டு வைக்கவும்.

சிறிது தண்ணீரில் சோள மாவை கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஒலிவ் எண்ணெய் விட்டு சூடாக்கி அதனுள் பொடியாக வெட்டிய பூண்டு, பொடியாக வெட்டிய வெங்காயத்தாள் என்பவற்றைப் போட்டு வதக்கவும்.

பின்னர் அதனுள் தக்காளி கெச்சப், ரெட் சில்லி சோஸ் விட்டு கிளறவும்.

பின்னர் அதனுள் சோளமா கரைசல், சோயா சோஸ், உப்பு சேர்த்து கிளறவும்.

கலவை கொஞ்சம் கெட்டியானதும் அதனுள் பொரித்து வைத்த இட்லி துண்டுகளை போட்டு கிளறவும்.

இட்லி மஞ்சூரியன் தயார்.

இதனை பரிமாறும் தட்டில் போட்டு கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: