இட்லி அரிசி ரவை உப்புமா
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி ரவை - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வற்றல் மிளகாய் - 1
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை மாதிரி உடைக்கவும்.
மிளகு சீரகம் ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
அரிசி ரவையை சலித்து கொள்ளவும், (மாவு இல்லாமல் இருந்தால் ஒட்டாது)
ஒரு பானில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை
தாளிக்கவும்.
அதில் தேவையான அளவுக்கு (அளவு 1:2) விட்டு உப்பு
சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தண்ணிர் கொதிக்கும் போது தீயை குறைத்து
ரவை,பருப்பு,மிளகு சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக
கலந்து அதை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு
கிளறி விட்டு மூடி விடவும்.
10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கிளறிவிடவும்.
அடுத்தை அணத்துவிட்டு உப்புமா மீது கொஞ்சம் நெய்
தேங்காய எண்ணெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதில் கொஞ்சம் கடலை பருப்ப்பு, பச்சை பருப்பு உடைத்தும் சேர்க்கலாம்.
கத்தரிக்காய் கொத்சு, வற்றல் குழம்பு சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.