இஞ்சி சப்பாத்தி
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - கால் கிலோ
இஞ்சிச்சாறு - 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் பேஸ்ட் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பட்டர் (அல்லது) நெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, பச்சைமிளகாய் பேஸ்ட், இஞ்சிச்சாறு, சர்க்கரை சேர்த்து வெது வெதுப்பான வெந்நீரில் குழைக்கவும்.
பிறகு அதை சப்பாத்தியாகவோ, கொசுவம் வைத்து பரோட்டா போன்று இல்லை வேண்டிய வடிவில் செய்து தவாவில் போட்டு சுட்டெடுக்கவும்
குறிப்புகள்:
பனீர் மின்ட் கறி, வெஜ் குருமா, மட்டன் சிக்கன் குருமா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.