ஆலு பரோட்டா (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

கோதுமை மாவு - 4 கப்

மஞ்சள் தூள் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

சோம்புத்தூள் - சிறிது

கொத்தமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

பிசைந்த மாவின் மேலே ஒரு மூடி அல்லது ப்ளாஸ்டி ரேப்பரை போட்டு மூடி வைத்து ஊறவிடவும்.

தேவையான மசாலாத் தூள்கள் மற்றும் இதர பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை கழுவி தோலோடு குக்கரில் போட்டு, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். கிழங்கு வெந்ததும் தோலை நீக்கிவிட்டு நன்கு மசித்துக்கொள்ளவும்.

பின்னர் மசித்த உருளைகிழங்கில் அனைத்து தூள்களையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும்.

அத்துடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை கொட்டி நன்கு கிளறவும். மசாலா வாசனை போகும் வரை கிளறி, பின்னர் இறக்கி வைத்து ஆறவிடவும்.

பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து ஒரு ஆரஞ்சு அளவு எடுத்து, கோதுமை மாவில் லேசாக தேய்த்து, பின்னர் வட்டமாக சப்பாத்திப் போல் தேய்க்கவும். அதன் மத்தியில் ஒரு கரண்டி அளவு உருளை மசாலாவை வைக்கவும்.

மசாலா கலவையை வைத்து எல்லா ஓரங்களையும் மையப்பகுதியை நோக்கி மடித்து மசாலா தெரியாதவாறு மூடவும்.

இதனை வெறும் கோதுமை மாவில் லேசாக தேய்த்துக்கொண்டு, மீண்டும் சப்பாத்திப் போல் தேய்க்கவும். இந்த முறை மிகவும் எச்சரிக்கையாக தேய்க்கவேண்டும். அழுத்தி தேய்த்தால் உள்ளே வைத்துள்ள மசாலா வெளியில் வந்துவிடும். இதேபோல் அனைத்து மாவையும் ஸ்டப்டு பரோட்டாக்களாக செய்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு தவாவை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களில் ஒன்றை எடுத்துப் போட்டு, தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.

முதலில் குறைவான தீயிலும், பின்னர் தீயை கூட்டி வைத்து சுற்றி வர எண்ணெய் ஊற்றி மேலேயும் சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்துவிடவும். இப்படியே அனைத்து பரோட்டாக்களையும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: