ஆப்பிள் சாண்ட்விச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 8

ஆப்பிள் - 2

பட்டை பொடி - 1/4 தேக்கரண்டி

சர்க்கரை - 5 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - 1 பின்ச்

செய்முறை:

ஆப்பிளை தோல், கொட்டைகளை நீக்கி பொடியாக நறுக்கவும். வாணலியில் அரை கப் தண்ணீர் வைத்து ஆப்பிளை வேக விடவும்.

ஆப்பிள் முக்கால் பாகம் வெந்து தண்ணீர் வற்றியதும் சர்க்கரை, 1 மேசைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கிளறவும்.

சர்க்கரை உருகி பிரவுன் நிறம் வந்ததும் உப்பு, பட்டை பொடி தூவி 1 நிமிடம் கிளறி இறக்கவும்.

ப்ரெட் ஸ்லைஸின் இரு புறமும் வெண்ணெய் தடவி ஆப்பிள் கலவை வைத்து மற்றொரு ஸ்லைஸால் மூடி டோஸ்ட் செய்து பரிமாறவும்.

குறிப்புகள்: