ஆந்திரா பெசரெட் தோசை
0
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு - 1 கப்
பச்சரிசி - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவைக்கு
டாப்பிங்:
வெங்காயம் நறுக்கியது - 3/4 கப்
பச்சை மிளகாய் நறுக்கியது - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பயறையும், அரிசியையும் ஊறவைத்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு டாப்பிங்கிற்காக சொன்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
பின்பு அரைத்த மாவை தோசை வார்த்து நடுவில் சிறிது டாப்பிங் வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு அழுத்தி முறுகலாக எடுக்கவும்.