ஆட்டா மாவு தோசை
தேவையான பொருட்கள்:
ஆட்டா மாவு - 2 கப்
ஓட் மீல் அல்லது கோதுமை தவிடு - 1/2 கப்
பொடியாக வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
சிவப்பு மிளகாய் வத்தல் - 5
பெரிய சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிவப்பு வத்தல் மிளகாயை சிறிய துண்டுகளாக பிய்த்து வைக்கவும்.
பின்னர் எண்ணெயை சூடாக்கி அதனுள் பொடியாக வெட்டிய வெங்காயம், வெட்டிய சிவப்பு மிளகாய் வத்தல், பெரிய சீரகம், கடுகு என்பவற்றைப் போட்டு தாளிக்கவும்.
ஆட்டா மாவு, ஓட் மீல் அல்லது கோதுமை தவிடு், உப்பு என்பவற்றை போதுமான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு குழைக்கவும்.
பின்னர் அதனுள் தாளித்தவற்றைக் கொட்டிக் கலக்கவும்.
பின்னர் தோசைக் கல்லில் தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
இதனை சாம்பார், குழம்பு, பருப்பு என்பவற்றுடன் சாப்பிடலாம்.