அவல் புட்டு

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

ஏலக்காய் - 2

சர்க்கரை - சுவைக்கு ஏற்ப

வறுத்த முந்திரி, தேங்காய் - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

முதலில் மேற்சொன்ன் தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவலை மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் உடைத்து எடுக்கவும். ஏலக்காய், சர்க்கரை சேர்த்து இடித்து வைக்கவும்.

உடைத்த அவலை இட்லி தட்டில் ஈரத்துணியில் வைத்து உதிராக வரும் வரையில் ஆவியில் வேக வைக்கவும்

பின்பு தேங்காய், சர்க்கரை கலவை, பொடித்த அவல், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: