அவல் தோசை (2)
0
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
அரிசி - 3 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - சிறிது
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
சோள மாவு - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு சிறிய கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவல், அரிசி 5 அல்லது 6 மணி நேரம் தனி தனியே ஊற வைக்கவும். அவல், அரிசி, கறிவேப்பிலை இவைகளை அரைத்துக் கொள்ளவும்.
மற்ற பொருட்களை சேர்த்து வறுக்கவும். தேங்காயை சேர்த்தும் அரைக்கலாம் அல்லது வாறுக்கும் போது சேர்க்கலாம். இதை மறுநாள் வறுத்தால் நன்றாக இருக்கும். அரைத்த அன்றே வார்க்கவேண்டும் என்றால் தயிர் சேர்த்து வறுக்கவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலையை சிறிது சிறிதாக நறுக்கி போடவும். தோசை புளிப்பாகவும், மிருதுவாக வரும்.