அரிசி உப்புமா (2)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 டம்ளர்
துவரம்பருப்பு (2 மணி நேரம் ஊற வைக்கவும்) - 1/4 டம்ளர்
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் (பொடியாகக் கிள்ளி வைக்கவும்) - 2
மிளகுப் பொடி - 3/4 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஊற வைத்த துவரம்பருப்பை, நீரை வடிய விட்டு வைக்கவும்.
பச்சரிசியை மிக்ஸியில் போட்டு, ரவையாக உடைக்கவும்.
இத்துடன், துவரம்பருப்பையும் போட்டு, ரவையாக உடைக்கவும்.
பிரஷர் பானை, அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு, தாளிக்கவும்.
இதிலேயே, கிள்ளி வைத்த சிவப்பு மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, மிளகுப்பொடி, சீரகம், இவற்றைப் போட்டு, கிளறவும்.
இத்துடன் நெய் ஊற்றவும்.
இதில், பொடித்து வைத்திருக்கும் அரிசி, துவரம்பருப்பு ரவையைப் போட்டு, கட்டியில்லாமல், நன்கு கிளறவும்.
பிறகு, அடுப்பில், தீயைத் தணித்து வைத்துக் கொண்டு, நான்கு தம்ளர் தண்ணீரை, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிளறவும்.
மஞ்சள் பொடி, இஞ்சி பேஸ்ட், பெருங்காயத்தூள் இவற்றையும் சேர்க்கவும்.
பிரஷர் பானை மூடி வைத்து, 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
சூடு தணிந்ததும், திறந்து, உப்பு சேர்த்து, கிளறவும்.