ஃப்ரைடு இட்லி (2)
தேவையான பொருட்கள்:
இட்லி - 6
வெங்காயம் - 1
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
காரட் - 1
முட்டை - 2
பீன்ஸ் - 100 கிராம்
முட்டைகோஸ் - 100 கிராம்
நெய் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 12
மல்லி இலைா - சிறிது
புதினா இலை - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள். - 1 1/2 தேக்கரண்டி
கறி மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கல்பாசி இலை - சிறிது
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறிது
எண்ணெய் - 6 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக வைக்கவும். எல்லா காய்களையும் பொடியாக நறுக்கவும்.
இட்லியை ஓரங்குல நீளத்திற்கு நறுக்கவும். முட்டையை அடித்துக் கொள்ளவும். ஏலம், கிராம்பு, பட்டையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கல்பாசி இலையை போட்டு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
பின்னர் நறுக்கிய காய்களை போட்டு வதக்கவும். காய் வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு மிளகாய்த்தூள், கறி மசாலா தூள் போட்டு வதக்கவும்.
அதில் உப்பு, அடித்த முட்டையை ஊற்றி சிறிது நேரம் வேக விடவும்.
வெந்ததும் இட்லியை போட்டு கிளறி விடவும்.
நெய்யில் முந்திரியை வறுத்து போடவும். மல்லி புதினா தூவி இறக்கி விடவும். ஃப்ரைட் இட்லி ரெடி.