வெந்தயக்கீரை சாம்பார்
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 2
தக்காளி - 1
துவரம் பருப்பு - 1/2 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
ஆச்சி சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுந்து, வெந்தயம் - தேவையான அளவு (சிறிது)
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிய துண்டு
செய்முறை:
புளியை நீரில் ஊற வைக்கவும். வெந்தயக்கீரையை உருவி தண்ணீரில் அலசி வைக்கவும், பருப்பை வேக வைத்து எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போடவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதங்கியதும் வெந்தய கீரையை போட்டு கிளறவும்.
இப்பொழுது பொடி வகைகளை போடவும்.
கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர் மற்றும் வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து கிளறவும்.
சாம்பார் நன்றாக கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இங்கு குறிப்பிட்டுள்ள மிளகாய்த் தூள் என்பது மிளகாய் மற்றும் மல்லி சேர்த்து அரைத்த பொடி.