வெங்காய சாம்பார் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நைசாக நீள நீளமாக அரிந்த வெங்காயம் - 4

சிறிது சிறிதாக அரிந்த தக்காளி - 2

கடுகு , உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு

கறிவேப்பிலை - 1 இனுக்கு

பட்டை , கிராம்பு - சிறிது

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

சீரகம் - 2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் பாதி அளவு எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,கடுகு,உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

3 நிமிடம் கழித்து தக்காளி போட்டு மீண்டும் நன்றாக பேஸ்ட் போல் வதக்கவும்.

அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் ,சாம்பார் பொடி ,உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

அரைக்க கொடுத்தவைகளை அரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.

இதனுடன் மீதி உள்ள எண்ணையை ஊற்றி கொதித்தபின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: