மொச்சை சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மொச்சை பருப்பு - 1/2 கப்

சிறிய வெங்காயம் - 6

தக்காளி - 1

புளி - கொஞ்சம்

கறிவேப்பிலை - கொஞ்சம்

கடுகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

தேங்காய் - 1/4 கப்

தனியா - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6

என்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

அரைக்க உள்ளவையில் தேங்காய் தவிர மற்ற எல்லாவற்றையும் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து கொள்ளவும். மொச்சையை ஊற வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்னெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்த பிறகு கறிவேப்பிலை போடவும்.

வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி சேர்க்கவும், பின் மொச்சையும் சேர்த்து அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு உப்பும் போட்டு கிளறவும்.

புளிக்கரைசல், வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விடவும்.

மேலும் காரம் வேண்டும் என்றால் ஒரு தேக்கரண்டி காரத்தூள் சேர்க்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடு சாதத்தில் விட்டு இது சாப்பிட நன்றாக இருக்கும்.