முள்ளங்கி சாம்பார் (2)
தேவையான பொருட்கள்:
சின்ன முள்ளங்கி - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - நடுத்தர அளவில் இரண்டு
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவும்.
முள்ளங்கியை வட்டமாக அரிந்து கொள்ளவும்.
குடைமிளகாயையும் நறுக்கி கொள்ளவும்.
தேவையான மசாலாத் தூள்களையும், இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற, அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.
அதில் ஆறு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்து வந்ததவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் கொத்துமல்லி தூவி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.