முள்ளங்கி சாம்பார் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 1/4 கிலோ

துவரம் பருப்பு - 1/2 கப்

சாம்பார் வெங்காயம் - 10

தக்காளி - 1

கறிவேப்பில்லை - 3 இலை

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

கடுகு - தாளிக்க

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் துவரம் பருப்பினை ப்ரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து கொள்ளவும்.

பின் முள்ளங்கியை தோல் சிவி சிறிய சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

வெங்காயத்தினை தோல் உரித்து வைக்கவும். தக்காளியை நீளமாக வெட்டி கொள்ளவும். புளியினை கரைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

குக்கரில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள புளியினை சேர்த்து கலக்கவும்.

பின்னர் வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி அதனை ப்ரஷ்ர் குக்கரில் போடவும்.

அதே கடாயில் முள்ளங்கியை போட்டு வாசம் போகும் வரை வதக்கவும்.

பின்னர் இதனையும் குக்கரில் போட்டு நன்றாக வேக விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: