முள்ளங்கி சாம்பார்
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 2
சின்ன வெங்காயம் - 6
கொத்தமல்லி தழை - சிறிதளவு
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க: பெருங்காயம், கடுகு
அரைக்க:
கடலை பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
தனியா பொடி - 1/2 மேசைக்கரண்டி
வர மிளகாய் - 2
தேங்காய் - 1 கப்
செய்முறை:
முள்ளங்கி மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கவும். பருப்பை அரைமணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
புளியையும் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் போட்டு வறுக்கவும். பருப்பு நிறம் மாறியதும் தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை சூடு ஆறிய பின்பு தனியா தூள் சேர்த்து அரைக்கவும்.
உப்பு கலந்த நீரில் நறுக்கிய முள்ளங்கி, வெங்காயத்தையும் சேர்த்து வேக வைக்கவும்.
காய் வெந்த பின்பு புளியை கரைத்து வேக வைத்த காயுடன் கலக்கவும்.
பின்பு, அரைத்த விழுதையும் காயுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து வரும் போது, வேக வைத்த துவரம் பருப்பை நன்கு மசித்து அதில் கலக்கவும்.
பின்பு கடுகு, பெருங்காயம் தாளித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தனியா தூளுக்கு பதில், பருப்புகளை வறுக்கும் போது தனியாவை வறுத்து அரைக்கலாம்.