முருங்கைக்கீரை சாம்பார்
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய், பூண்டு - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி, ஆல் பர்பஸ் பொடி - 1 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்புடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயம் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்பு முருங்கைக்கீரை, தக்காளி சேர்த்து வதக்கவும்.
புளி நீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அதை வேக வைத்த பருப்புடன் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு நுரைத்து வரும் போது ஆல் பர்பஸ் பொடி சேர்க்கவும்.
இறக்கும் போது சிறிது கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.