முருங்கைக்காய் சாம்பார் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்

தேங்காய் - 1/2 கப் அரைத்தது

கொத்தமல்லி - 1 1/2 தேக்கரண்டி

வத்தல் - 4

கடுகு - 1 தேக்கரண்டி

நச்சீரகம் - 1 தேக்கரண்டி

புளிகரைசல் - 1 1/2 கப்

முருங்கைகாய் - 4

பெருங்காயம் - சிறிது

கொத்தமல்லி இலை - சிறிது

மஞ்சள் தூள் - சிறிது

கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வத்தல்,கொத்தமல்லி, நச்சீரகம் இவற்றை எண்ணெய்யில் வதக்கி, பாதி தேங்காய் விழுதையும் சேர்த்து அரைக்கவும்.

முருங்கைகாயை வெட்டி உப்பு,மஞ்சள் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும்

துவரம் பருப்பை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

காய்கறி வெந்ததும் அதனுடன் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு அனைத்தயும் சேர்த்து புளிகரைசலையும் ஊற்றி வேகவிடவும்.

பின் ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, போட்டு வெடித்ததும் பெருங்காயம் கருவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

பின் மீதி உள்ள தேங்காய் விழுதையும் சேர்த்து உப்பு போட்டு நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: