முருங்கைக்காய் சாம்பார்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 10 நறுக்கிய துண்டுகள்

புளி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - 3

பெரிய வெங்காயம் - பாதி

தக்காளி - 2

சீரகம் - 1/2 மேசைக்கரண்டி

வெந்தயம் - 1/2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி விதை - 1/2 மேசைக்கரண்டி

சாம்பார்த் தூள் - 2 மேசைக்கரண்டி

மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் - இரு கிள்ளு

மல்லித் தழை - சிறிது

வேக வைக்க:

துவரம்பருப்பு - 1 கப்

பூண்டு - 2

மஞ்சள் தூள் - சிறிது

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

தாளிக்க:

கடுகு - சிறிது

கடலை உளுத்தம் பருப்பு - தலா ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 5 இதழ்

வரமிளகாய் - 3

செய்முறை:

புளியை கரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். வேக வைக்க கொடுத்தவற்றை வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை போட்டு தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயத்தையும், பூண்டையும் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கவும்.

பின் முருங்கைக்காயை போட்டு நன்கு பிரட்டவும்.

5 நிமிடம் கழித்து 2 கப் புளிக்கரைசல் தண்ணீர் ஊற்றி ஒரு மேசைக்கரண்டி சாம்பார் தூள் மற்றும் மல்லி தூளை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் பெருங்காயத் தூளை சேர்க்கவும்.

முருங்கைக்காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கிளறி ஒரு மேசைக்கரண்டி சாம்பார் தூளை சேர்க்கவும்.

சாம்பார் ஆனதும் மல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: