பொன்னாங்கண்ணி சாம்பார்
தேவையான பொருட்கள்:
கீரை - ஒரு கட்டு
வடகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 2
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கீரை அலசி விட்டு போட்டு தண்ணீர் சேர்த்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு வேக விடவும்.
தேங்காயுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை கரைத்து 1 1/2 கப் அளவு புளிக்கரைச்சல் எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடகம் போட்டு வதக்கிய பிறகு கீரையை சேர்க்கவும்.அதன் பின்னர் வேக வைத்த பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய் விழுது சேர்க்கவும்.
கடைசியாக புளிக்கரைசல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைத்து பரிமாறவும்.