பாசிப்பருப்பு சாம்பார் (1)
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 200 கிராம்
உளுந்து - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை குக்கரில் நன்கு குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் உருளைக்கிழங்கினையும் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து, பச்சை மிளகாய், தேங்காய், சீரகம் அனைத்தையும் போட்டு வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பருப்பு மற்றும் அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
அத்துடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
வெண்பொங்கலுக்கு நல்ல காம்பினேஷன்.