பருப்பு இல்லாத இட்லி சாம்பார்
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் (பரங்கிக்காய்) - 1 துண்டு
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
சின்னவெங்காயம் - 10
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் - சிறிய துண்டு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
பூசணிக்காய், பச்சை மிளகாய், சின்னவெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு எல்லாம் சேர்த்து குக்கரில் வேக விடவும்.
வெந்ததும் கரண்டியால் கடையவும். சாம்பார் பொடி, புளிக்கரைசல், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு, புளி, காரம் பார்க்கவும்.
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் தாளிக்க வேண்டியவற்றை
தாளித்து சேர்க்கவும். மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.