பயத்தம்பருப்புச் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய் - 1/4 கிலோ

பயத்தம்பருப்பு - 1 கப்

காய்ந்தமிளகாய் - 10

தேங்காய் - அரை மூடி

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

புளி - எலுமிச்சம் பழ அளவு

சின்ன வெங்காயம் - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் பயத்தம்பருப்பை குழைய வேக வைத்து எடுத்துக் கடைந்துக் கொள்ளவும்.

தேங்காய், மிளகாய், சீரகத்தை ஒன்றாய் சேர்த்து அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக சிவந்ததும் கறிவேப்பிலையைப் போட்டு வெடித்ததும் புளியைக் கரைத்து ஊற்றவும்.

புளிகரைசலின் பச்சை வாடை போன உடன், உப்பு, அரைத்த மசாலா, மஞ்சள் போட்டுக் கொதிக்க வைக்கவும்.

தேவையானால் முருங்கை, கத்தரி, உருளை போன்ற காய்களில் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ நறுக்கிப் போட்டு வேக விடவும்.

காய்கள் வெந்தவுடன் மசித்த பருப்பை அதில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: