பச்சைமிளகாய் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரி காய் - 2

முருங்கை காய் - 2

அவரை காய் - 3

பச்சை மிளகாய் - 8

துவரம் பருப்பு - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 12

பெரிய வெங்காயம் - பாதி

தேங்காய் பூ - 3/4 கப்

புளி - நெல்லிக்காய் அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 4

தக்காளி - பாதி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

கத்தரிக்காய், முருங்கைகாய் இரண்டையும் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அவரைக்காயை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும்.

புளியை அரை கப் தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரம் அல்லது ப்ரஷர் பானில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, அதில் பருப்பைக் கொட்டி மூடிவைத்து சுமார் 3 நிமிடங்கள் வேகவிடவும்.

பருப்பு வெந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கள் மற்றும் சின்ன வெங்காயத்தையும் அதில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.

பின்னர் மூடியைத் திறந்து, கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். உப்பையும் சேர்க்கவும். கரண்டியால் கலக்கி விட்டு வேகவிடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டுத் தாளிக்கவும்.

பின்னர் பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலைப் போட்டு சற்று நேரம் வதக்கவும்.

வதக்கியவற்றை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இரண்டு நிமிடங்கள் சென்ற பிறகு, அரைத்து வைத்துள்ள தேங்காய், பச்சை மிளகாய் விழுதினை சாம்பாரில் கொட்டி சிறிது நேரம் மூடி வைத்து வேகவிடவும். சுமார் 4 நிமிடங்கள் வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட சுவையானது.