தோசை சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசி பருப்பு - 1கப்

சின்ன வெங்காயம் -5

தக்காளி - 1

பச்சைமிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 4 பற்கள்

சீரகம், மிளகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

எண்ணை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசிபருப்பை லேசாக வறுத்து, மஞ்சள் பொடி,சிறிது எண்ணை, நறுக்கிய தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.

வெங்காயம், மிளகாய் நறுக்கிவைக்கவும்.

பூண்டை உரித்து சீரகம்,மிளகுடன் சேர்த்து தட்டிவைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை தாளித்து தட்டிய பூண்டு போட்டு வதக்கி வெந்த பருப்பை சேர்க்கவும்.

உப்பு, பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிட்டு மத்தினால் கடைந்து விடவும்.

குறிப்புகள்:

இது தோசை,பனியாரத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.