சாம்பார் மற்றொரு வகை
தேவையான பொருட்கள்:
விரும்பிய காய்கள் - 1/2 கிலோ
துவரம் பருப்பு - 1 கப்
சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 4
தக்காளி பழம் - 2
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம்பருப்பை பெருங்காயம் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
பின்னர் வெந்தயத்தைப் போட்டு சிவந்ததும், கறிவேப்பிலையைப் போடவும். அது வெடித்ததும் கீறிய பச்சைமிளகாயை போட்டுத் தக்காளிப்பழங்களை வெட்டிப் போடவும்.
புளியைக் கரைத்து ஊற்றி சாம்பார் பொடியை போட்டு தேவையான உப்புப் போடவும்.
அதில் நறுக்கின காய்களையும் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
காய்கள் வெந்ததும் வெந்த பருப்பை மசித்துக் கலந்து மீண்டும் கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.