சரவண பவன் ஹோட்டல் சாம்பார்

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 டம்ளர்

கத்திரிக்காய் - 1

முருங்கைக்காய் - 1

சாம்பார் வெங்காயம் - 10

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

புளி - சிறிய லெமன் அளவு

உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு:

பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி

பெரிய தக்காளி - 1

தேங்காய் - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

வற்றல் மிளகாய் - 1

கறிவேப்பிலை, மல்லி இலை - தேவைக்கு

செய்முறை:

காய்கறிகளை பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கவும்.

முதலில் பருப்பை வேக வைக்கவும்.

வேகவைத்த பருப்புடன், 4 டம்ளர் நீர் விட்டு நறுக்கிய காய், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.

அரைக்க கூறியவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்து அதனுடன் புளியையும் கரைத்து ஒன்றாக, கொதிக்கும் சாம்பாரில் விடவும்.

காய் வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கி சாம்பரை அதில் ஊற்றவும்.

மல்லி இலை போட்டு கொதித்ததும் இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: