கோவைக்காய் மசூர் தால் சாம்பார்
தேவையான பொருட்கள்:
வேகவைக்க:
மசூர் தால் - 1/2 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
பரங்கிக்காய் - ஒரு சிறிய துண்டு
புளி - ஒரு சிறிய எலுமிச்சை பழம் அளவு
வெல்லம் - ஒரு பிட்டு
கோவைக்காய் - எட்டு
பாகற்காய் - ஆறு ரவுண்டு வில்லைகள்
வறுத்து பொடிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
முழு தனியா - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
வெந்தயம் - 3
கறிவேப்பிலை - ஐந்து கொத்து
பெருங்காயம் - ஒரு பின்ச்
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் இரு பருப்புகளையும் களைந்து ஊற வைத்து வேக வைக்க கொடுத்துள்ளவைகளை போட்டு குழைய வேக வைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் கருக விடாமல் வறுத்து பொடித்து கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து கொள்ளுங்கள்.
கோவைக்காயை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளவும். வட்ட வடிவமாக நறுக்கிய பாகற்காய் ஆறு. புளி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
பிறகு கோவக்காய் மற்றும் பாகற்காயை சேர்க்கவும்.
பாதி வெந்ததும் பொடித்து பொடியை சேர்க்கவும்.
பிறகு வெல்லம் வேக வைத்த பருப்பை மீண்டும் ஒரு முறை மசித்து சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கடைசியில் நெய், கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சர்க்கரை வியாதிக்கு நல்லது