கொத்தமல்லி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு - 1/4 கப்

நறுக்கிய கொத்தமல்லி - 2 1/4 கப்

சின்ன வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 5

முருங்கைக்காய் - 1

பூண்டு - 15

பச்சை மிளகாய் - 12

புளி - நெல்லிக்காய் அளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 1/2 தேக்கரண்டி

நெய் - 1 மேசைக்கரண்டி + 1 தேக்கரண்டி

கல் உப்பு - 1/2 மேசைக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 வேக வைக்கவும். புளியுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் வெங்காயம், போட்டு பொன்னிறமாகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.

அதனுடன் நறுக்கின பூண்டு, பச்சை மிளகாய் போட்டு 30 நொடி வதக்கிய பிறகு நறுக்கின தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு முருங்கைக்காய் ஆகியவற்றை போட்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.

வேக வைத்த பருப்பை எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு குழைவாக மசித்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் புளிக்கலவைக் கொதித்ததும் பாதி அளவு கொத்தமல்லி மற்றும் மசித்து வைத்திருக்கும் பருப்பு தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.

சாம்பார் ஒரு நிமிடம் கொதித்து நுரைத்து வரும் போது மீதம் உள்ள கொத்தமல்லி தழையை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து விடவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து அதை சாம்பாருடன் சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: