குழந்தைகள் இட்லி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி -1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பில்லை - 3 இலை

கொத்தமல்லி - சிறிதளவு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி (தேவையானல்)

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பினை ப்ரஷர் குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லியை மிகவும் பொடிதாக அரிந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின் சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.

பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

அதன் பின் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் வேக வைத்துள்ள துவரம் பருப்பினை 1 டம்ளர் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்தவுடன் பெருங்காயம், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.