குடைமிளகாய் சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாம்பார் பருப்பு - 1 கப்

பச்சை குடைமிளகாய் - 1 (பெரியது அல்லது 2 சிறியது)

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி (காரம் தேவைக்கேற்ப போடவும்)

நல்ல மிளகுப்பொடி - 1/2 தேக்கரண்டி

பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி

கொத்தமல்லித் தழை - கொஞ்சம்

உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

நல்ல மிளகு - 5 என்னம்

பூண்டு - ஒரு பல் (நசுக்கி வைக்கவும்)

கறிவேப்பிலை - ஒரு கீற்று

செய்முறை:

சாம்பார் பருப்பை குக்கரில் 4 விசில் விட்டு இறக்கவும்.

பச்சை குடைமிளகாயை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாகவும், தக்காளியை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், வெந்தயம், நல்லமிளகு, நசுக்கியபூண்டு, கறிவேப்பிலை, போட்டு தாளித்துக் கொள்ளவும்.

பின்னர் வெங்காயத்தையும் தக்காளியும் நன்றாக வதக்கவும், அடுத்து பச்சை குடைமிளகாய் துண்டுகளை வதக்கி அதில் சாம்பார்பொடி, நல்ல மிளகுப்பொடி போட்டு ஒரு தடவை கிண்டி விடவும்.

கடைசியில் வேகவைத்தப் பருப்பை சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.

குடைமிளகாய் வெந்து கொதித்து வற்றி வரும் போது பெருங்காயப்பொடி மற்றும் கொத்தமல்லித் தழை கிள்ளி போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: