கத்திரிக்காய் ரசவாங்கி
0
தேவையான பொருட்கள்:
பிஞ்சுக் கத்திரிக்காய் - 1/4 கிலோ
புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு
வெந்த துவரம் பருப்பு - 2 கப்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
கடலைப் பருப்பு - 1/4 கப்
தனியா - 14 கப்
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - 1/2 மூடி
தாளிக்க - கடுகு , கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் மூன்றையும் சிறிது எண்ணை விட்டு வறுக்கவும்.
வறுபட்டதும் தேங்காய்த் துருவலைப் போட்டு லேசாக வறுத்து அரைத்து வைக்கவும்.
கத்தரிக்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு புளிக்கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.
கத்தரிக்காய் வெந்ததும் வெந்த பருப்பைப் போடவும்.
பில் அரைத்த விழுதைப் போட்டு சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி கடுகு, கறிவேப்பிலை, தாளித்துக் கொட்டி பரிமாறவும்.